Published : 15 Jun 2023 06:15 AM
Last Updated : 15 Jun 2023 06:15 AM
கட்டிடங்கள் அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப - தற்காலிகம், தற்கால நிரந்தரம், நிரந்தரம் என மூன்று வகைப்படும். நிரந்தரக் கட்டிடங்களின் பயன்பாட்டுக் காலம் 50 ஆண்டுகளுக்குக் குறையக் கூடாது. உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை போன்றவை 100 வயதுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். கட்டிடங்களின் வயதுக்கு ஏற்றவாறு கட்டுமானப் பொருள்கள், தரம், பராமரிப்பு போன்றவை மாறுபடுகின்றன. ‘கான்கிரீட்’ என்பது தொழில்நுட்பச் சொல். ‘செயற்கைப் பாறை’ என்று அதற்குப் பொருள். கான்கிரீட்டின் பலமும் அதன் உறுதித்தன்மையும் ஆங்கில மொழியின்பால் ஈர்க்கப்பட்டு, ‘நிரந்தரம்’, ‘உறுதி’ போன்றவற்றுக்கு இணைப்பொருள் சொல்லாகவும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT