Published : 11 Jun 2023 09:08 AM
Last Updated : 11 Jun 2023 09:08 AM
ஜோர்ஜி காஸ்படினவின் ‘டைம் ஷெல்டர்’ (Time Shelter) 2023ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இந்த நாவல் ஆங்கில எழுத்தாளர் எச்.ஜி வெல்ஸின் ‘கால எந்திரத்’தை (Time Machine) நினைவுக்குக் கொண்டுவரக்கூடும். ஆனால், இவ்விரண்டுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. ‘கால எந்திரம்’ எதிர்காலத்தை மையப்படுத்துகிறது. ‘டைம் ஷெல்டர்’ கடந்தகாலத்தை மையப்படுத்துகிறது.
கடந்தகாலம், அது சார்ந்த நினைவுகள், அந்த நினைவுகளையொட்டிய நிகழ்வுகள் – இவையெல்லாம் இணைந்த ‘டைம் ஷெல்டர்’ பல்கேரிய மொழியிலிருந்து ஏஞ்செலா ரோடெலால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.ஐந்து பாகங்கள் கொண்ட இந்த நாவலின் முதல் பாகத்தின், முதல் அத்தியாயத்திலேயே காலத்தைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவலொன்றை முன்வைக்கிறார் ஜோர்ஜி காஸ்படினவ்: ‘காலம் எப்போது தொடங்கியது என்பதைக் கணிக்க முற்பட்டார்கள். பதினேழாம் நூற்றாண்டு மத்தியில், அயர்லாந்தைச் சேர்ந்த உஷர் என்ற பாதிரியார் காலம் தொடங்கியது கி.மு. 4004 ஆண்டு என்றார். தேதி அக்டோபர் 22 என்றும் குறிப்பிட்டார்.. அது ஒரு சனிக்கிழமை. அன்று பிற்பகல் ஆறு மணிவாக்கில்தான் அது நடந்திருக்கிறது’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT