Published : 06 Jun 2023 06:18 AM
Last Updated : 06 Jun 2023 06:18 AM
தென் அமெரிக்கக் கடற்பகுதிக்கும் இந்தியப் பருவமழைக்கும் என்ன நேரடித் தொடர்பு இருந்துவிடப்போகிறது என்று தோன்றலாம். மிக ஆழமான தொடர்பு இருக்கிறது என்பதே ‘எல் நினோ விளைவு’ உணர்த்தும் செய்தி.
எல் நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation) என்பது கிழக்கு பசிபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் நிகழ்வுகளின் தொகுப்பு. இதில் முதன்மையாக இரண்டு நிலைகள் உண்டு: ஒன்று, எல் நினோ (El-Nino) எனப்படும் வெப்பமான காலகட்டம்; மற்றொன்று, லா நினா (La Nina) என்று அழைக்கப்படும் குளிர்ந்த காலகட்டம். இரண்டுக்கும் இடையிலான சமநிலை (Neutral Phase) காலகட்டமும் உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT