Published : 02 Jun 2023 06:15 AM
Last Updated : 02 Jun 2023 06:15 AM
தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் 1967 முதல் 1976 வரையில் இருந்த முதல் இரண்டு திமுக ஆட்சிக் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பேரறிஞர் அண்ணாவும் பிறகு கலைஞர் மு.கருணாநிதியும் முதலமைச்சர்களாக இருந்த இந்தக் காலகட்டத்தில்தான் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று இன்று அழைக்கப்படும் ஆட்சிமுறைக்கான அடித்தளங்கள் ஒவ்வொன்றாக இடப்பட்டன.
பிற்காலத்தில் பிற மாநிலங்களுக்கு மத்தியில் மட்டுமல்ல, பல மூன்றாம் உலக நாடுகளின் மத்தியிலும்கூட தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்பதற்கான அரசியல், சட்ட, நிர்வாக வித்துக்கள் பருவம் பார்த்து விதைக்கப்பட்ட காலம் இந்தக் காலம்தான். தமிழ்நாடு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பெயரை மீட்டெடுத்தது மட்டுமன்றி, தன் நவீன தேசிய இன அம்சங்களான மொழி, இன வரலாறு, பண்பாட்டுக் கூறுகளை அதிகாரபூர்வமாக அறுதிசெய்ததும் இக்காலத்தில்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT