Last Updated : 23 Feb, 2025 07:29 AM

 

Published : 23 Feb 2025 07:29 AM
Last Updated : 23 Feb 2025 07:29 AM

ப்ரீமியம்
வாழ்க்கை விளையாட்டுகள் | சிற்றன்னை 75

எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’, குற்றவுணர்வால், கழிவிரக்கத்தால் மனித மனங்கள் படும்பாட்டை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கும் நாவல். ‘ஒரு மரணத்தால் இங்கே ஒன்றும் மாறிவிடப்போவதில்லை’ என்கிற தத்துவ விசாரம் அடிக்கடிச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், ஒரு மரணத்தால், ஒரு இல்லாமையால் பலதும் நிகழத்தான் செய்கின்றன. ‘சிற்றன்னை’யில் ஒரு மரணம், ஒரு குடும்பத்தையே புரட்டிப்போடுகிறது; இரு பிஞ்சுக் குழந்தைகளை மன ஊனமாக்குகிறது. இன்னொரு மரணத்துக்கும் காரணமாகிறது. இவையெல்லாம் தொந்தரவு செய்யும் ரீதியில் இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளது.

சிங்​கார​வடிவேலு ஒரு ஆசிரியர், இயல்பான மனச் சஞ்சலங்​கள், கோபதாபங்கள் உள்ளவர். அவரது ஒரு பெரிய வீடு கதையில் சொல்​லப்​படு​கிறது. அந்த வீட்டுக்​குள் ஒரு குட்​டிப் பெண் குறுக்​கும் நெடுக்​குமாக ஓடிக்​கொண்​டிருக்​கிறாள். அவரது மகள்; பெயர் குஞ்சு. மரகதம் என்கிற இளம் பெண் இருக்​கிறாள். அவள் யார், அவளுக்​கும் சிங்​கார​வடிவேலு​வுக்​கும் என்ன உறவு, இந்தக் கேள்வி​களுக்​கெல்​லாம் கதையோட்​டத்​தில்​தான் பதில் கிடைக்​கிறது. இது புது​மைப்​பித்தன் கையாண்​டிருக்​கும் உத்தி. குஞ்சு, புத்​திசாலித்​தனமான குழந்தை. அதனால் துறு​துறு​வென்று இருக்​கிறது. களைப்புடன் இருக்​கும் அப்பாவுக்கு சித்தி​யுடன் சேர்ந்து பலகாரத்​தைத் தானே எடுத்து​வந்து தருகிறது. ‘ஓடி வருகை​யிலே உள்ளம் குளிருதடி/ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி’ என்கிற பாரதி​யின் வரிகளுக்கு ஏற்ப உச்சி நுகரத் தூண்​டும் மழலை அது. சுந்​தர​வடிவேலு​வும் மகளை கூடிய​முட்டும் எடுத்​துக் கொஞ்​சிக் கொண்​டிருக்​கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x