Published : 25 Dec 2024 06:18 AM
Last Updated : 25 Dec 2024 06:18 AM
இன்று டிசம்பர் 25, நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள். நமது அன்புக்குரிய முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100ஆவது பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. எண்ணற்ற மக்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த ராஜதந்திரியாக அவர் உயர்ந்து நிற்கிறார்.
21ஆம் நூற்றாண்டை நோக்கிய இந்தியாவிற்கு மாற்றத்தின் சிற்பியாகத் திகழ்ந்த வாஜ்பாய்க்கு நாடு எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கும். 1998ஆம் ஆண்டில் அவர் பிரதமராகப் பதவியேற்றபோது, நமது நாடு நிலையற்ற அரசியல் காலக்கட்டத்தைக் கடந்து சென்றது. அதற்கு முந்தைய 9 ஆண்டுகளில் 4 முறை மக்களவைத் தேர்தல் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT