Published : 22 Dec 2024 08:08 AM
Last Updated : 22 Dec 2024 08:08 AM
இரா.நல்லகண்ணு அரசியலில் அறியப்பட்ட அளவுக்கு இலக்கியத்தில் அறியப்படவில்லை. இளம் பருவத்திலேயே வாசிப்பதில் பேரார்வம் கொண்டவர். பள்ளியில் பலவேசம் என்ற ஆசிரியர் இவருக்கு ஊக்கச்சக்தியாக விளங்கினார். விடுதலைப் போராட்டக் களம் பாரதியை அறிமுகப்படுத்தியது. சிறை வாழ்வு பொதுவுடமை இலக்கியங்களை வாசிக்கும் வாய்ப்பைத் தந்தது. மார்க்சியத் தத்துவ நூல்களுடன், இலக்கிய நூல்களையும் கற்கத் தொடங்கினார்.
1954இல் சிறையில் ஆங்கிலக் கவிஞர் ஆல்பிரட் டென்னிஸனின் படைப்பிலிருந்து ‘மாண்ட வீரனை மனைக்குக் கொண்டு வந்தனர்’ என்கிற பகுதியை மொழிபெயர்த்தார். இது இவரின் கவித்துவ ஆற்றலை வெளிப்படுத்தியது. அறிஞர் நா.வானமாமலை, எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் ஆகிய மூவரும் இவருக்கு முன்னோடிகளாக விளங்கினர். தொடக்கத்தில் இவர்களுடனான உறவு இளம் வயதில் இலக்கியப் பற்றை உருவாக்கியது. 1962இல் ஆர்.என்.கண்ணன் என்கிற பெயரில் ‘சூத்திரதாரி’ சிறுகதையை ‘சாந்தி’ இதழில் எழுதினார். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியைச் சித்தரிக்கும் அற்புதமான சிறுகதை அது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT