Published : 05 Dec 2024 06:24 AM
Last Updated : 05 Dec 2024 06:24 AM
சென்னையைச் சேர்ந்த பிரதீப் குமார், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராகவும் வாடகை இரு சக்கர வாகன ஓட்டியாகவும் பணிபுரிந்துவந்தார். நவம்பர் 20இல் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் ஒரு கார் அவரது வாகனத்தின் மீது மோதியதில், அவர் பாலத்துக்குக் கீழே வீசப்பட்டு உயிரிழந்தார். கார் உரிமையாளர் தலைமறைவானார்.
ஜூனில் ஒரு நாள், வழக்கம்போல வேலைக்குக் கிளம்பிய ரேவதி, தன் தாயும் மகளும் விபத்தில் இறப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார். ரேவதியின் குழந்தையை மருத்துவரிடம் காட்டுவதற்காக அவருடைய அம்மா, உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திருமழிசை அருகே பின்னாலிருந்து வந்த ஒரு பைக் மோதியது. பேத்தியும் பாட்டியும் சாலையிலேயே உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT