Published : 04 Dec 2024 06:18 AM
Last Updated : 04 Dec 2024 06:18 AM
நவம்பர் 18 அன்று சென்னைக்கு வருகை தந்த 16 ஆவது நிதிக் குழுவிடம் தமிழகத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. அதற்கான காரணங்களை விரிவாக விளக்கவும் செய்தது. ஒரு மாநில அரசு அதிக நிதி கேட்பது வழமைதானே என்று பலர் இதைக் கடந்து போய்விட்டார்கள். வெகு சிலர், நிதிக் குழுவின் ஒதுக்கீடு தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை என்று சொல்வதையும் கேட்க முடிந்தது. இது அப்படியான பிரச்சினைதானா? இது வெகுமக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும்?
எப்படி நடக்கிறது நிதிப் பகிர்வு? - இப்போது, மத்திய அரசுதான் மூன்றில் இரண்டு பங்கு வரிகளை வசூலிக்கிறது. ஆனால், மூன்றில் ஒரு பங்கு செலவினங்கள்தான் அதன் கீழ் வருகின்றன (பாதுகாப்பு, அயலுறவு, பேரிடர் நிவாரணம் முதலியன). மாறாக, மாநிலங்களுக்கு வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கே கிடைக்கிறது. ஆனால், அவை மூன்றில் இரண்டு பங்கு செலவினங்களை (சுகாதாரம், கல்வி, சமூகநலம், உள்கட்டமைப்பு, வேளாண்மை, வட்டி முதலியன) எதிர்கொள்கின்றன. இந்தக் கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள, மாநிலங்களிலிருந்து பெற்ற வரி வருவாயில் ஒரு பங்கை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT