Published : 03 Dec 2024 06:19 AM
Last Updated : 03 Dec 2024 06:19 AM

ப்ரீமியம்
சிறப்புக் குழந்தைகளின் குரலாக...

விளிம்பு நிலைச் சமூகங்களின் உரிமைகளைப் பற்றி உரக்கக் குரல் கொடுக்க அச்சமூகத்திலிருந்து மட்டுமே போராளிகள் வர வேண்டும் என்பதல்ல. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கத் தேவைப்படுவதெல்லாம் சுயநலமற்ற அன்பும், மன விரிவும்தான். வாழ்நாள் முழுவதும் தகவல் தொடர்புத் திறன் குறைவாகவோ அல்லது முழுமையாக இல்லாதவராகவோ அமைந்துவிடும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோரைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகளின் குரலாக ஒலிக்க வேண்டிய பணி அவர்களின் அல்லது குழந்தைகளின் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்தாக வேண்டியிருக்கிறது.

சிங்​கப்பூர் எழுத்​தாளர் விழா: என் மகன் கனிக்கு ஆட்டிசம் இருப்​ப​தாகக் கண்டறிந்த நாள் தொடங்கி, அவனது 10 வயது வரையிலான வாழ்க்கை வரலாற்றை ‘எழுதாப் பயணம்’ (2019) என்னும் பெயரில் நூலாக்​கினேன். அந்நூலை அச்சுக்குத் தரும் முன்பே, ஐனோசிஸ் எனும் நிறுவனத்தின் உதவியுடன், முழுமை​யாகப் பேச இயலாத குழந்தை​களுக்கு உதவும் வகையிலான ‘அரும்பு மொழி’ என்னும் செயலியையும் உருவாக்​கினோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x