Published : 02 Dec 2024 06:18 AM
Last Updated : 02 Dec 2024 06:18 AM

ப்ரீமியம்
பசுமைக் கண்துடைப்பா பாகு காலநிலை மாநாடு?

அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நவம்பர் 11 முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை, 29ஆவது காலநிலை உச்சி மாநாடு (Conference of Parties - COP 29) நடைபெற்று முடிந்திருக்கிறது. காலநிலை சார்ந்த நிதி ஒதுக்கீடு முடிவுகளை எடுப்பதே முக்கிய நோக்கம் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது ‘நிதி உச்சிமாநாடு’ (Finance COP) என்றும் வல்லுநர்களால் அழைக்கப்பட்டது. மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் பெரும்பாலான செயல்பாடுகள் ஏமாற்றம் தருபவையாகவே இருக்கின்றன.

தலை​வர்​களின் பங்களிப்பு குறைவு: அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜெர்மனி, பிரேசில் போன்ற முக்கிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்​க​வில்லை. அந்தந்த நாடுகளின் பிரதி​நி​திகள் பேச்சு​வார்த்​தைகளில் கலந்து​கொண்​டனர். “காலநிலைப் பிரச்சினை எவ்வளவு தீவிர​மானது என்பதை இந்நாடுகள் புரிந்​து​கொள்ள​வில்லை என்பதை இது வெளிப்​படுத்து​கிறது” எனக் காலநிலை அறிவிய​லா​ளர்கள் விமர்​சித்திருக்​கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x