Published : 29 Nov 2024 06:23 AM
Last Updated : 29 Nov 2024 06:23 AM
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் எல்லாப் பயிர்களின் சாகுபடிப் பரப்பளவும் பெரும் சரிவைக் கண்டிருக்கிறது. 1970-71இல் 61.89 லட்சம் ஹெக்டேராக இருந்த பயிரிடும் மொத்தப் பரப்பளவு 2018-19 இல் 45.82 லட்சம் ஹெக்டேராகக் குறைந்திருக்கிறது. இதே 50 வருடங்களில் தமிழ்நாட்டில் தரிசு நிலம் 15.38 லட்சம் ஹெக்டேரிலிருந்து 29.78 லட்சம் ஹெக்டேராக இரட்டிப்பாகியுள்ளது. அகில இந்திய அளவில் இந்த வருடங்களில் தரிசு நிலங்கள் 36.38 சதவீதமே உயர்ந்துள்ளன.
தமிழ்நாட்டின் மொத்தப் பொருள் உற்பத்தியில் (Gross State Domestic Product) / மொத்த வருவாயில் (State Income) விவசாயத் துறையின் பங்கு 1950இல் 56 சதவீதமாக இருந்து 1980இல் 36 சதவீதமாகக் குறைந்தது; 2000இல் இது 17 சதவீதமாகி, 2021ல் 13% என்றாகிவிட்டது. தமிழ்நாடு விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும், விவசாயத் துறையானது உற்பத்தித் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது மொத்த உற்பத்தியின் வளர்ச்சியையும் மட்டுப்படுத்திஇருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT