Last Updated : 28 Oct, 2024 06:17 AM

 

Published : 28 Oct 2024 06:17 AM
Last Updated : 28 Oct 2024 06:17 AM

ப்ரீமியம்
சென்னை வெள்ளம்: புதிய வடிவமைப்புக் கொள்கை

சென்னையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பெருமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டிருந்தது. பின்னர் அது நீக்கிக்​கொள்​ளப்​பட்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பலவீனமடைந்​ததால் முன்கணிப்பு​களை​விடக் குறைவான மழையே பெய்தது. எனினும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்​கப்​பட்டு​ இருந்த முந்தின நாள் (அக்டோபர் 15) கொட்டிய மழையால், பல இடங்களில் வெள்ளம் வடியாமல் இருந்தது. பட்டாளம், வியாசர்​பாடி, பெரம்​பூர், சூளை முதலான வட சென்னைப் பகுதி​களிலும் திருவான்​மியூர், தி.நகர், துரைப்​பாக்கம், வேளச்சேரி முதலான தென் சென்னைப் பகுதி​களிலும் வெள்ளம் வடிய ஒரு நாள் ஆனது.

எப்போதும்போல் சமூக ஊடகங்​களில் விவாதம் நடந்தது. சிலர் இந்த மழையைச் சென்னை நகரால் தாங்க முடிய​வில்லையே என்று விமர்​சித்தனர். வானிலை முன்னறி​விப்பு ஆர்வலர் ஒருவர் இதற்கு விடையளித்​தார். சென்னையில் 30 செ.மீ. - 40 செ.மீ. (சென்​டிமீட்டர்) மழை பெய்தால் அது வடிவதற்குத் தாமதமாகவே செய்யும் என்றார் அவர். அப்படிச் சொன்னதால் பல இணையவாசிகளின் தாக்குதலுக்கும் உள்ளானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x