Published : 24 Oct 2024 06:13 AM
Last Updated : 24 Oct 2024 06:13 AM
‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்நுட்பம் இப்போது அதிக அளவில் பேசப்படுகிறது. குறிப்பாக, மருத்துவத் துறையில் இது குறித்து உற்சாகக் குரல்களும் எச்சரிக்கை மணிகளும் கலந்து ஒலிக்கின்றன. ஒருவரிடமிருந்து அவரது இரட்டையரை (அதாவது பிரதியை) உருவாக்க முடியுமா என்பதற்குக் கிடைக்கக்கூடிய பதில் ‘குளோனிங்’ (Cloning). ஆனால், இதில் இருவரும் உயிருள்ள மனிதர்கள். அப்படி இன்றிக் கணினியின் மூலம் ஒருவர் குறித்த தகவல்களையெல்லாம் அதேபோன்ற வடிவத்தில் சேமிக்க முடிகிறது என்பதுதான் ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்நுட்பம்.
எப்படிச் சாத்தியமாகிறது? - ஒரு விமான இன்ஜினில் பழுது ஏற்படுகிறது என்றால் என்ன செய்யலாம்? பழுது நீக்குவதில் தவறாகச் செயல்பட்டால் எக்கச்சக்கமான இழப்பு நேரிடலாம். மாறாக, அந்த விமானத்தின் அத்தனைப் பண்புகளையும் தகவல்களையும் டிஜிட்டல் மூலமாகச் சேமித்தால், அதுவே இந்த விமானத்தின் பிரதிபோல இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT