Published : 17 Oct 2024 06:14 AM
Last Updated : 17 Oct 2024 06:14 AM
பிஹார், கேரளம் போன்ற மாநிலங்களில் மாதவிடாய் விடுப்பு இருப்பதால் தமிழ்நாட்டிலும் அப்படியான ஏற்பாடு தேவை என்று சமீபகாலமாகப் பலர் குரல் கொடுக்கின்றனர். ஆனால், மாதவிடாய் விடுப்பு அவசியம்தானா என விவாதிப்பது அவசியம்.
உண்மை நிலவரம்: ஸ்பெயின், ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்பு முறை உள்ளது. இங்கிலாந்தில் இதற்கெனத் தனி விடுப்பு இல்லை. தேவை என்றால் பெண்கள் இதை ‘உடல் நலமற்ற விடுப்பு’ என்று எடுத்துக்கொள்ளலாம். அதற்கென்று சட்டம் இல்லை; ஆனால், நிறுவனங்கள் அவர்களின் விருப்புரிமைப்படி வழங்கலாம். அமெரிக்காவிலும் இந்த விடுப்பு முறை இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT