Published : 07 Oct 2024 06:25 AM
Last Updated : 07 Oct 2024 06:25 AM
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஏழை தலித் மாணவரின் உயர் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகத் தனது சிறப்பு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள திதோரா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் அதுல் குமார். பொறியியலுக்கான பொதுநுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) வெற்றி பெற்ற இவருக்கு தன்பாத் ஐஐடியில் பி.டெக். மின் பொறியியல் பாடப் பிரிவில் இடம் கிடைத்தது.
கல்லூரியில் அவரது சேர்க்கையை உறுதிசெய்வதற்காக ஜூன் 24 மாலைக்குள் 17,500 ரூபாயைக் கட்டும்படி நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அதுல் மிகுந்த சிரமப்பட்டுப் பணத்தைத் திரட்டிவிட்டார். எனினும், கடைசி சில நிமிடத் தாமதத்தால் பணம் செலுத்த முடியாமல் கல்லூரியில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்திடம் முறையிட்டும் பலனில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT