Last Updated : 16 Aug, 2024 06:24 AM

3  

Published : 16 Aug 2024 06:24 AM
Last Updated : 16 Aug 2024 06:24 AM

ப்ரீமியம்
வக்ஃபு திருத்த மசோதா எதிர்க்கப்படுவதன் காரணம்

வக்ஃபு சட்டத்தில் திருத்​தங்களை மேற்கொள்ள நாடாளு​மன்​றத்தில் கொண்டு​வரப்​பட்டிருக்கும் மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்​பி​யிருக்​கிறது. சிறுபான்​மை​யினரின் விவகாரங்​களில் தலையிடும் வகையிலும், அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்​படுத்த வழிசெய்யும் வகையிலும் இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பின்னணி என்ன?- இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், செல்வந்​தர்கள், மக்களின் பயன்பாட்டுக்காக இறையருள் பெருகத் தங்கள் பகுதியில் இருக்கும் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரால் தானமாக வழங்கப்​பட்டவையே வக்ஃபு சொத்துக்​களாகும். அவை அசையும் சொத்துக்​களாக​வும், அசையாச் சொத்துக்​களாகவும் இருக்​கின்றன. இந்தச் சொத்துக்​களைக் கண்காணிப்​ப​தற்​காக​வும், அதில் தவறு நிகழ்ந்​து​விடக் கூடாது என்பதற்​காக​வும், நாடாளு​மன்​றத்தில் வக்ஃபு சட்டங்களை அரசு 1954இல் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்​களிலும் வக்ஃபு வாரியங்கள் 1958இல் ஏற்படுத்தப்​பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x