Published : 05 Aug 2024 06:13 AM
Last Updated : 05 Aug 2024 06:13 AM
உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு (WEF - The World Economic Forum) 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேசப் பாலின இடைவெளி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற 146 நாடுகளில் இந்தியாவுக்கு 129ஆவது இடம் கிடைத்துள்ளது. 2022இல் பாலின இடைவெளியில் 135ஆவது இடத்திலிருந்த இந்தியா, 2023இல் 8 இடங்கள் முன்னேறி 127ஆவது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பாலின இடைவெளியில் இரண்டு இடங்கள் பின்தங்கி இருக்கிறது.
அரசியல், சமூகம், கல்வி, அதிகாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்பு பெண்களுக்குக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக ஆண் - பெண் சமூக-பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதையே பாலின இடைவெளி என அழைக்கிறோம். பாலின இடைவெளிக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கல்வி இதில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT