Last Updated : 30 Jul, 2024 06:25 AM

 

Published : 30 Jul 2024 06:25 AM
Last Updated : 30 Jul 2024 06:25 AM

ப்ரீமியம்
அஞ்சலி: சி.டி.குரியன் | பொருளியல் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கான இந்திய வழிகாட்டி

‘எதை உற்பத்தி செய்​வது? எப்படி உற்பத்தி செய்​வது? யாருக்காக உற்பத்தி செய்​வது?’ பொருளாதாரத்து​க்கு ஆணிவேராக விளங்கும் இந்த மூன்று கேள்​விகளில் இருந்து பிறப்​பவையே கோட்​பாடுகள். இந்தக் கோட்​பாடுகளை முற்றிலுமாக அலசி ஆராய்ந்து, ‘யாருக்கு எது சொந்​தம்? யார் என்ன செய்​கிறார்​கள்? யாருக்கு என்ன கிடைக்​கிறது?’ என்று அதற்கு மாற்றான மூன்று கேள்​விகளை உருவாக்கி, சமூகத்​தைச் சிந்​திக்கத் தூண்​டியவர்; இக்கேள்​விகளுக்கு விடை தேடும்படி தன் மாணவர்களை ஊக்குவித்​தவர் கிறிஸ்டோபர் தாமஸ் குரியன் என்கிற சி.டி.குரியன்.

அப்படி விடைகளைத் தேடிய அவரது மாணவர்கள் பலர் இன்றைக்கு அரசியல் தலைவர்​களாகவும் பொருளாதார நிபுணர்​களாகவும் வளர்ந்து நாட்டுக்​குப் பங்களிப்பு செய்​துவருகின்​றனர். அவர்​களது பொருளியல் ஆசானாகிய சி.டி.குரியன் கடந்த 23.7.2024 அன்று தனது 93ஆம் வயதில் மறைந்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x