Published : 30 Jul 2024 06:20 AM
Last Updated : 30 Jul 2024 06:20 AM
‘உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த பனை மரக் கள்ளை நிபந்தனையின்றி விற்க அரசு அனுமதிக்க வேண்டும்’ - புதுக்கோட்டை மாவட்ட வேளாண் கூட்டமைப்புச் செயலாளர் நடராஜன், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள் இவை.
சங்க காலம் தொடங்கி, தற்போது வரைக்கும் கள் மருந்தாகவும் உணவாகவும் இருப்பதைத் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஜூன் 27இல் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுந்தரம், கள்ளச் சாராயம் குடித்த பலர் சமீபத்தில் பலியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டி, இது போன்ற சம்பவங்களைத் தடுக்கப் பனை மரக் கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என வாதாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT