Published : 21 Jun 2024 07:18 AM
Last Updated : 21 Jun 2024 07:18 AM
பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் முடிந்து ஆட்சியும் அமைந்தாகிவிட்டது. தற்போதைய தேர்தல்முறைப்படி, ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இது உலகத்தில் குடியாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது உருவாக்கப்பட்ட முறை. யோசித்துப் பாருங்கள். இதில், அதிக வாக்கு பெற்று வெற்றிபெறும் வேட்பாளர், பதிவான வாக்குகளில் சுமார் 30% வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். ஆனால், அவருக்கு எதிராகப் பல்வேறு கட்சிகள் / சுயேச்சைகளுக்கு வாக்களித்த 70% பேரின் வாக்குகளுக்கு எந்தவித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் ஒலிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT