Published : 12 Jun 2024 07:48 AM
Last Updated : 12 Jun 2024 07:48 AM
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காதபோது, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம். இந்தக் கூட்டணி தேர்தலுக்கு முன்பே அமைந்ததாகவும் இருக்கலாம். சட்டமன்றத் தேர்தலுக்கும் இது பொருந்தும். இந்தியாவுக்குக் கூட்டாட்சி புதிதல்ல. ஆட்சி அமைக்கவிருக்கும் கட்சியுடன் பிற கட்சிகள் கூட்டணி அமைத்து, அமைச்சர் பதவிகளைப் பெற்று ஆட்சியில் பங்கேற்பதும் உண்டு. வெளியில் இருந்து ஆதரவு தருவதும் உண்டு.
கைகொடுக்கும் கட்சிகள்: மத்தியில் ஆட்சி தொடர்வதையும் கவிழ்வதையும் கூட்டணிக் கட்சிகளே தீர்மானிக்கின்றன. 1975இல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையானது, மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் தொடக்கத்துக்குக் காரணமாக அமைந்ததுடன், 1977இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வியிலும் முக்கியப் பங்கு வகித்தது. மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி 298 இடங்களையும் கூட்டணிக் கட்சிகளோடு 345 இடங்களையும் வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து 189 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் அல்லாத முதல் ஆட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அமையவும் அந்தத் தேர்தல் வழிவகுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT