Published : 10 Jun 2024 08:47 AM
Last Updated : 10 Jun 2024 08:47 AM
பொதுவாக, எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் என்பது ஓர் அக்னிப் பரீட்சைதான். ஆனால், ஒருசில தேர்தல்கள் அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுவது உண்டு. அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் முக்கியக் கட்சிகள் / கூட்டணிகளின் வீழ்ச்சியையும் வளர்ச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
திமுக கூட்டணியின் பாதை: தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்கிற முனைப்போடு களமிறங்கிய திமுகவின் எண்ணம் நிறைவேறியிருக்கிறது. தேர்தலில் திமுகவின் நேர்மறையான அம்சம் வலுவான கூட்டணி. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியைப் போலவே இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது இக்கூட்டணியின் பலம். கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காமல், கடைசி நேரத்தில் கூட்டணி உடைந்த வரலாறுகள் உண்டு. 2018இல் தொடங்கி ஒற்றுமையாக ஓர் அணியை வழிநடத்திச் செல்வதில் திமுக தலைமையின் பங்களிப்பு அதிகம். சவாலான கோவை, தேனி போன்ற தொகுதிகளைத் திமுக எடுத்துக்கொண்டு, எளிதில் வெற்றிபெற வாய்ப்புள்ள மயிலாடுதுறை, திண்டுக்கல் போன்ற தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்த அணுகுமுறை இதற்குச் சரியான உதாரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT