Published : 05 May 2024 07:27 AM
Last Updated : 05 May 2024 07:27 AM
கதைக்கும் வரலாற்றுக்குமான இடைவெளி ஆய்வுகளால் மட்டுமே வெளிச்சப்படுத்தப்படும். சில கதைகள் வரலாற்றின் வீச்சுப் போலவேமுகங்காட்டினாலும், வரிக்கு வரி கற்பனைப் பூச்சுடன் எழுதப்பட்டிருப்பதை நுணுக்கப் பார்வை தெளிவுபடுத்தும். வரலாறும் அப்படித்தான். உண்மைகளையே அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருந்தாலும் எழுத அல்லது சொல்லப்பட்டிருக்கும் முறையால், ‘இது கதையோ’ என்று உணர வைக்குமாறு அமைந்துவிடும். சொல்லப்போனால், சில கதைகள் சாகா வரம் பெற்று வரலாறாகவே வாழ்கின்றன. சில வரலாறுகள் சரியாக வெளிப்படாமையினால் கதைகளோ என்று மருளவைக்கின்றன.
மூன்று பேர் வாழ்க்கையில் நேர்ந்த ஒரேநிகழ்வைப் புராணக்கதையாகவும் கல்வெட்டுச் சொல்லாடலாகவும் காலம் நம் முன் நிறுத்துகிறது. தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானின் தோழராகக் கொண்டாடப்படுபவர். அவரது வாழ்க்கையை விளக்கும் திருத்தொண்டர் புராணம், ஒற்றியூரில் தாம் காதலித்து மணந்த சங்கிலிக்கு அளித்த வாக்குறுதியை மீறியதால், அவருக்கு நேர்ந்த பார்வையிழப்பையும் அதன் தொடர் விளைவுகளையும் விரிவாகப் பேசுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT