Published : 30 Apr 2024 06:23 AM
Last Updated : 30 Apr 2024 06:23 AM
இந்திய உளவியல் பண்பாட்டு ஆய்வுநோக்கு, உளப்பகுப்பாய்வு சிகிச்சை ஆகியவற்றில் தனிப்பெரும் ஆளுமையாக, உலகெங்கும் அறியப்பட்ட பெரும் சிந்தனையாளராக விளங்கியவர் சுதிர் காக்கர் (1938-2024); அவர் ஏப்ரல் 22 அன்று தன் 85ஆவது வயதில் காலமானார். தனித்துவமிக்க அவரது அறிவுலகப் பயணம், இந்திய மனோவியலைப் புரிந்துகொள்ள இன்றியமையாதது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது பங்களிப்பைச் சுருக்கமாகக் கவனம் கொள்வது அவசியமாகும்.
பொதுவாக, நம் சமூகத்தில் மனநல மருத்துவம் என்பதை மனநிலை பிறழ்ந்தவர்களை, அதாவது பைத்தியம் என்று கூறப்படுபவர்களை அல்லது போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், தற்கொலை செய்துகொள்ள விழைபவர்கள் ஆகியோரைக் குணப்படுத்துவதற்கான ஒன்றாக அறிந்துள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT