Published : 10 Apr 2024 02:39 PM
Last Updated : 10 Apr 2024 02:39 PM
தமிழகத்தின் அருகே இருந்தாலும் புதுச்சேரியின் கலாச்சாரம், பண்பாடு தொடங்கி அரசியல் வரை பல விஷயங்களில் கணிசமான வேறுபாடு உண்டு. பிரெஞ்சு அரசின் ஆளுகைக்கு கீழ் இருந்த புதுச்சேரிக்குத் தற்போதும் பிரெஞ்சு தொடர்புகளே அதிகம். இன்றைக்கு இந்தியாவின் ஒன்றிய பிரதேசங்களுள் ஒன்றாக இருக்கும் புதுச்சேரி, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது 1954-ல் தான்.
புதுச்சேரியில் மீன்பிடித்தொழில், சுற்றுலா, உணவு விடுதி, மதுபான விற்பனையே முக்கிய வருவாய் ஈட்டும் தொழில்கள். யூனியன் பிரதேசமான புதுச்சேரி காங்கிரஸுக்கு செல்வாக்கு மிக்க பகுதி. நீண்டகாலமாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமான முறை போட்டியிட்டு வென்றுள்ளனர். அக்கட்சியின் சார்பில் சண்முகம், பாரூக், நாராயணசாமி ஆகியோர் வென்ற தொகுதி. காங்கிரஸைத் தவிர திமுக, அதிமுக, பாமகவுக்கு வாக்கு வங்கி உள்ள தொகுதி. 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு வென்றது.
புதுச்சேரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 10,20,914
⦁ ஆண் வாக்காளர்கள்: 4,79,329
⦁ பெண் வாக்காளர்கள்: 5,41,437
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 148
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | 2-ம் இடம் பிடித்தவர் |
1971 |
மோகன் குமாரமங்கலம், காங் |
சேதுராமன், ஸ்தாபன காங் |
1977 |
அரவிந்த பால பஜனோர், அதிமுக | அன்சாரி துரைசாமி, ஸ்தாபன காங் |
1980 |
சண்முகம், காங் | லட்சுமி நாராயணன், ஜனதா |
1984 |
சண்முகம், காங் | திருநாவுக்கரசு, திமுக |
1989 |
சண்முகம், காங் | மணிமாறன், திமுக |
1991 |
பாரூக், காங் | லோகநாதன், திமுக |
1996 |
பாரூக், காங் | ஆறுமுகம், திமுக |
1998 |
ஆறுமுகம், திமுக | சண்முகம், காங் |
1999 |
பாரூக், காங் | ராமதாஸ், பாமக |
2004 |
ராமதாஸ், பாமக | லலிதா குமாரமங்கலம், பாஜக |
2009 |
நாராயணசாமி, காங் | ராமதாஸ், பாமக |
2014 |
ராதாகிருஷ்ணன், என்.ஆர்.காங் | நாராயணசாமி, காங் |
2019 |
வெ. வைத்தியலிங்கம், காங்கிரஸ் | DR. நாராயணசாமி கேசவன், என்.ஆர்.காங் |
2019-ம் ஆண்டு புதுச்சேரி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு புதுச்சேரி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT