Published : 08 Apr 2024 05:15 PM
Last Updated : 08 Apr 2024 05:15 PM
தலைக்காவிரியில் புறப்பட்டு தமிழகம் முழுவதும் செழிக்க வைக்கும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதி இடம்பெற்றிருப்பது மயிலாடுதுறை தொகுதி. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்துவந்த மயிலாடுதுறை, 1991-ல் புதிதாக உருவாக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதி இது.
காவிரி பாசன விவசாயப் பகுதியான இந்தத் தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது. பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் விவசாயமே இந்தப் பகுதியின் உயிர் மூச்சு. அரிசி, தேங்காய் பிரதான விளைபொருட்கள். காவிரியில் நீர்வரத்து இல்லாத காலங்களில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது.
அரசியலைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் நீண்டகாலமாக எம்.பி.யாக இருந்த தொகுதி. வழக்கமாகவே காங்கிரஸ் பாரம்பரிய தொகுதியாகவே இருந்துள்ளது. எனினும் அதிமுக மற்றும் திமுகவின் ஆதரவுடனேயே காங்கிரஸ் அதிகமுறை வென்றுள்ளது. பாமகவுக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ள தொகுதி இது.
ஒரு சுவாரஸ்யம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைப்பெற்று வருகிறது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ம் ஆண்டுதான் திமுக இந்தத் தொகுதியில் நேரடியாகக் களம் கண்டது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
• மயிலாடுதுறை
• கும்பகோணம்
• பாபநாசம்
• திருவிடைமருதூர்
• சீர்காழி (தனி)
• பூம்புகார்
மயிலாடுதுறை தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,38,351
• ஆண் வாக்காளர்கள்: 7,56,846
• பெண் வாக்காளர்கள்: 7,81,436
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 69
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் |
2-ம் இடம் பிடித்தவர் |
1977 |
குடந்தை ராமலிங்கம், காங் |
கோவிந்தசாமி, ஸ்தாபன காங் |
1980 |
குடந்தை ராமலிங்கம், காங் | கோவிந்தசாமி, ஸ்தாபன காங் |
1984 | பக்கீர் முகமது ஹாஜி, காங் | கல்யாணம், திமுக |
1989 | பக்கீர் முகமது ஹாஜி, காங் | கல்யாணம், திமுக |
1991 |
மணிசங்கர் அய்யர், காங் | குத்தாலம் கல்யாணம், திமுக |
1996 | ராஜேந்திரன், தமாகா | மணிசங்கர் அய்யர், காங் |
1998 | கிருஷ்ணமூர்த்தி, தமாகா | அருள்மொழி, பாமக |
1999 | மணிசங்கர் அய்யர், காங் | அருள்மொழி, பாமக |
2004 | மணிசங்கர் அய்யர், காங் |
ஓ.எஸ்.மணியன், அதிமுக |
2009 | ஓ.எஸ்.மணியன், அதிமுக |
மணிசங்கர் அய்யர். காங் |
2014 | பாரதி மோகன், அதிமுக | ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சி |
2019 | ராமலிங்கம் S, திமுக | ஆசைமணி S, அதிமுக |
மயிலாடுதுறை தொகுதியில் ’1977-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு’ வரை காங்கிரஸ் 7 முறையும், திமுக ஒரு முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2019-ம் ஆண்டு மயிலாடுதுறை மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT