Published : 04 Apr 2024 07:06 PM
Last Updated : 04 Apr 2024 07:06 PM
நீண்ட காலமாக வந்தவாசி மக்களவைத் தொகுதியாக இருந்த தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் 2009-ல் ஆரணி மக்களவைத் தொகுதியாக உருவெடுத்தது. ஆரணி, செய்யார் பகுதிகளில் விவசாயம் மற்றும் நெசவு பிரதானமான தொழிலாக இருக்கிறது. குறிப்பாக ஆரணி, களம்பூர் பகுதியில் மட்டும் சுமார் 200 நெல் அரவை ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் அரிசி வகைகள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பட்டு நகரம் என ஆரணி அழைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் ‘ஆரணி பட்டு’ மிகவும் பிரபலமானது.
வந்தவாசி தொகுதியில் தொடக்கக் காலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களே இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வந்தனர். காங்கிரஸ் காலத்துக்குப் பிறகும் அதிமுக, திமுக ஆகியவை இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது வழக்கமாக இருந்துள்ளது. அதிமுக, திமுகவை தவிர இந்தத் தொகுதியில் பாமகவுக்கும் ஒரளவு வாக்கு வங்கி இருக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான கிருஷ்ணசாமி, பலராமன் போன்றோரும், பாமகவின் துரை, மதிமுகவின் செஞ்சி.ராமசந்திரன் போன்றோர் இத்தொகுதியில் எம்.பி.யாக இருந்துள்ளனர். ஆரணி தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
ஆரணி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,90,440
ஆண் வாக்காளர்கள்: 7,31,824
பெண் வாக்காளர்கள்: 7,58,507
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:109
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:
வந்தவாசி தொகுதி
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
2ம் இடம் பெற்றவர் |
1977 |
வேணுகோபால், அதிமுக | துரைமுருகன், திமுக |
1980 |
பட்டுசுவாமி, காங் | வேணுகோபால், அதிமுக |
1984 |
பலராமன், காங் | பாண்டியன், திமுக |
1989 |
பலராமன், காங் | வேணுகோபால், திமுக |
1991 |
கிருஷ்ணசாமி, காங் | வேணுகோபால், திமுக |
1996 |
பலராமன், தமாகா |
கிருஷ்ணசாமி, காங் |
1998 |
துரை, பாமக | பலராமன், தமாகா |
1999 |
துரை, பாமக |
கிருஷ்ணசாமி, காங் |
2004 |
செஞ்சி ராமச்சந்திரன், மதிமுக | ராஜலட்சுமி, அதிமுக |
ஆரணி தொகுதி
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | 2ம் இடம் பெற்றவர் |
2009 |
கிருஷ்ணசாமி, காங் | சுப்பிரமணியன், அதிமுக |
2014 |
ஏழுமலை, அதிமுக | சிவானந்தம், திமுக |
2019 |
எம்.கே. விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் | வெ.ஏழுமலை, அதிமுக |
2019-ம் ஆண்டு ஆரணி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு ஆரணி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT