Published : 11 Mar 2024 06:20 AM
Last Updated : 11 Mar 2024 06:20 AM
புதுச்சேரியைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தைப் பெற்றோர்களிடம் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் 2012இல் ‘போக்சோ’ சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. குழந்தைப் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள தேக்கநிலையும் வழக்குகளைக் கையாள்வதில் உள்ள அசிரத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழக் காரணங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT