Published : 19 Feb 2024 06:13 AM
Last Updated : 19 Feb 2024 06:13 AM
18 வயதுக்கு உள்பட்டவர்களைக் குழந்தைகள் என்றே நம் சட்டம் சொல்கிறது. அந்த வயதுக்குள் திருமணம் செய்விப்பதோ குழந்தை பெறுவதோ - இரண்டுமே ஏற்க இயலாதவை. சட்டரீதியான கண்காணிப்புகள் இருந்தபோதிலும், குடும்பச் சூழல், வறுமை போன்றவற்றை முதன்மைக் காரணங்களாக்கிப் பதின்பருவத்திலேயே அதாவது - பள்ளிப் பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கும் வழக்கம் இன்னமும் தொடர்கதையாவது வருத்தமளிக்கிறது.
இந்த நவீன யுகத்திலும் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருதும் எண்ணத்திலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. பெண் குழந்தை என்றாலே வயிற்றில் கட்டியிருக்கும் நெருப்பென்ற போக்கையும் மாற்றிக்கொள்ளவில்லை. பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு முன்பாகவே யாரோ ஒருவர் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற சிந்தனையும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT