Published : 18 Dec 2023 06:16 AM
Last Updated : 18 Dec 2023 06:16 AM

ப்ரீமியம்
நாடாளுமன்றப் பாதுகாப்பு: விரிவான விவாதம் அவசியம்

டிசம்பர் 13 அன்று புதிய நாடாளுமன்றத்துக்குள் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட சில மணி நேரத்தில், மக்களவைக்கு உள்ளேயும், நாடாளுமன்ற வளாகத்திலும் புகுந்து சிலர் நிகழ்த்திய இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்திருக்கிறது. அதேவேளையில், இந்த விவகாரத்தை முன்வைத்து அரசும் எதிர்க்கட்சிகளும் மோதிக்கொள்வதால் நாடாளுமன்றம் முடக்கத்துக்குள்ளாவது விரும்பத்தக்கது அல்ல. டிசம்பர் 13 அன்று மதியம் 1 மணியளவில், மக்களவையின் பார்வையாளர் பகுதியிலிருந்து குதித்த ஒருவர், மேஜைகள்மீது தாவி ஓடியபடி, தன் காலணியில் மறைத்துவைத்திருந்த, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பும் கருவியை எடுத்து இயக்கினார். இன்னொரு நபரும் அவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் சென்று இதே போன்ற செயலைச் செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x