Published : 07 Dec 2023 06:13 AM
Last Updated : 07 Dec 2023 06:13 AM
அமெரிக்காவின் மிக முக்கியமான ராஜதந்திரியாகக் கருதப்பட்ட ஹென்றி கிஸிஞ்சர் (Henry Kissinger), தனது நூறாவது வயதில் நவம்பர் 29 அன்று காலமானார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் சிற்பி என்று அமெரிக்க அரசியல் தலைவர்களாலும் அரசியல் நோக்கர்களாலும் மெச்சப்படும் கிஸிஞ்சரின் வாழ்க்கை, பல்வேறு சாகசங்களும் சர்ச்சைகளும் நிறைந்தது.
அமெரிக்க ராஜகுரு: அமெரிக்காவின் 37ஆவது அதிபரான ரிச்சர்ட் நிக்ஸனின் தேசியப் பாதுகாப்புச் செயலராக 1969 முதல் 1974 வரை இருந்தவர் கிஸிஞ்சர். வாட்டர்கேட் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு, பதவிநீக்கம் செய்யப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், வேறு வழியின்றி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் நிக்ஸன். அவருக்குப் பின் பதவியேற்ற ஜெரால்ட் ஃபோர்டின் ராஜாங்கச் செயலராக 1974 முதல் 1977 வரை என மொத்தம் 8 ஆண்டுகாலம் கிஸிஞ்சர் பதவிவகித்தார். பதவிக்காலம் முடிந்த பின்னரும், தனது இறுதிநாள் வரை கட்சி வேறுபாடின்றி அமெரிக்க அரசியல் தலைவர்களின் ராஜகுருவாக வலம்வந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT