Published : 29 Nov 2023 06:13 AM
Last Updated : 29 Nov 2023 06:13 AM
இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் ரீதியாகப் பலவீனமானவை எனக் கருதப்படும் இடங்களில் எழுப்பப்பட்ட சாலைகளும், பாலங்களும், கட்டிடங்களும் இயற்கைப் பேரிடர்களான வெள்ளத்தினாலும் நிலச்சரிவுகளினாலும் அழிவுகளைச் சந்திக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் இமயமலையின் சுற்றுச்சூழல் நலன்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு, வணிக நோக்கத்துக்காக மலைப்பகுதிகள் அழிக்கப்படுவதால் இமயமலை தனது இயல்பை இழந்துவருவதாகத் தொடர்ந்து கவனப்படுத்தப்பட்டுவருகிறது.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இமயமலைத் தொடர்கள் பரவியிருக்கின்றன. இதில் இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்ட் மாநிலங்களில் தொழில்மயமாக்கலும் நகர்மயமாக்கலும் பலவீனமான இடங்களில் உருவாக்கப்பட்டு வருவதால், அவற்றுக்கான பின்விளைவுகளையும் அப்பகுதிகள் சந்தித்துவருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT