Published : 08 Nov 2023 06:13 AM
Last Updated : 08 Nov 2023 06:13 AM
சமீபத்தில் பழங்குடிச் சான்று கேட்டு, எவ்வளவோ போராடியும் கிடைக்காத விரக்தியில் மயிலாடுதுறை வேல்முருகன் (45) என்பவர், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், நீதிபதிகளின் ஓய்வறை முன்பாகவே தீக்குளித்து இறந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முன்பும் பின்புமாகப் பல சமூகங்கள் தங்களது விடுதலையைத் தாங்கள் விரும்பிய பெயரிலேயே அடைந்திருக்கின்றன.
ஆனால், சமகாலம்வரையிலும் விடுதலை அடையாத சமூகங்களில் ஒன்று குறவர் சமூகம். ‘ஆதிகுடி’, ‘மூத்த குடி’, ‘தொல்குடி’, ‘குறிஞ்சி நில மக்கள்’ என்று பெருமிதத்துக்குரிய பெயர்களுடன் அழைக்கப்பட்டாலும் சமூகத் தளத்தில் இச்சமூகம் மிகவும் பின்தங்கியுள்ளது. சரியான வழிகாட்டுதலும் அரசியல் தலைமையும் இல்லாமல் கையறு நிலையில் தவிக்கிறது இச்சமூகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT