Published : 31 Oct 2023 06:13 AM
Last Updated : 31 Oct 2023 06:13 AM
சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதற்கான முக்கியக் காரணிகளில் மகப்பேறுத் துறையும் ஒன்று. தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான 2030 க்கான இலக்கை முன்னதாகவே அடைந்து, தமிழ்நாடு சாதனை புரிந்ததில் பெரும் பங்கு மகப்பேறு மருத்துவர்களுக்கு உள்ளது. பிரசவத்தின்போது இரண்டு உயிர்களைக் காப்பாற்றப் போராடு பவர்கள் அவர்கள். எனினும், உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பதுடன், நியாயமற்ற விமர்சனங்களையும் தண்டனைகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதுதான் வேதனை.
நிதர்சனமும் விமர்சனமும்: தமிழகம் முழுவதும்அரசு மருத்துவமனைகளில் ஒரு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 4.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 50% அறுவைசிகிச்சைகள் மூலம் நடக்கின்றன. இதைத் தவிர, புற நோயாளிகள், உள் நோயாளிகள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, பெண்களுக்கான மற்ற அறுவை சிகிச்சைகள் (Gynecology Surgery) என ஏராளமான பணிகள் மகப்பேறு மருத்துவத் துறையினருக்கு உள்ளன. இதற்கு 2,000க்கும் மேல் மகப்பேறு நிபுணர்கள் தேவை. ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - அரசு மருத்துவமனைகளில் 700 மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT