Published : 23 Oct 2023 06:13 AM
Last Updated : 23 Oct 2023 06:13 AM
‘விரோதி பணியாவிட்டால் என்ன செய்வது? அழித்தொழிக்க வேண்டியதுதான்’ என்று கோபம் பொங்க எழுதியவர் மக்சிம் கார்க்கி; ஆனால் அவர்தான், ‘யுத்தம் வேண்டாம்’ என்றும் உலகத்து நாடுகளிடம் வேண்டினார். உலக இடதுசாரிகளின் இலக்கிய முகம் அவர். போரினால் ஏற்படும் அழிவைப் பார்த்த பிறகு அவர் விடுத்த கோரிக்கை, வேண்டுகோள், எச்சரிக்கை, அறிவுறுத்தல், படிப்பினை எல்லாம் அந்த இரண்டாம் சொற்களில் அடங்கியுள்ளன. இத்தனைக்கும் அவர் இரண்டாம் உலகப் போரைப் பார்க்காதவர், 1936இல் மறைந்துவிட்டவர்.
போர் என்னவோ இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்தாலும், மடிவது என்னவோ இரண்டு பக்கத்திலும் மக்கள், மக்கள், மக்கள்தாம். பாதிப்போ உலக நாடுகள் முழுமைக்கும். போருக்கான முடிவை எடுக்கும் தலைவர்கள் எப்போதும் மடிவதேயில்லை. இன வெறுப்பு கொண்டோரும், வரலாறு அறியாதவர்களையும் தவிர, வேறு யாரும் போரை ஆதரிக்க மாட்டார்கள். ஆயுதம் தயாரிப்பவர்களையும் தனக்குப் பாதுகாப்பு செய்துகொண்டவர்களையும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT