Published : 27 Aug 2023 07:52 AM
Last Updated : 27 Aug 2023 07:52 AM
பேராசிரியர் ராபர்ட் ஹார்டுகிரேவ் தனது 84ஆவது வயதில் (1939 - 2023) மறைந்துவிட்டார் என்கிற தகவலை அறிய நேர்ந்தவுடன், என் மனதில் அவர் எழுத்துகளை வாசித்து மகிழ்ந்த கணங்கள் ஓடி மறைந்தன. சில நாள்களுக்கு முன்புதான் அவர் மறைந்த செய்தி தாமதமாகப் பரவி இருக்கிறது. ஏனென்றால், யாரும் அருகில் இல்லாமல் மூப்பின் காரணமாக இறந்திருக்கிறார். அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்று, ‘டெக்சாஸ் பல்கலைக் கழக’த்தின் அரசு, ஆசியவியல் துறையின் வருகைதரு பேராசிரியராக இருந்த ஹார்டுகிரேவ் மே 21, 2023இல் வெஸ்டுலேக் என்ற ஊரில் தனது 84ஆவது வயதில் இறந்தார்’ என்று தெரிவிக்கிறது.
திராவிட இயக்கங்கள் குறித்து நூல்கள் எதுவும் எழுதப்படாத 60களில் தனது ஆராய்ச்சிக்காகச் சென்னைக்கு வந்து பல மாதங்கள் தங்கி, திராவிட இயக்கத் தலைவர்களை நேரில் சந்தித்தும், திராவிட இயக்க மாநாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு துண்டறிக்கைகளைத் திரட்டியும், கட்டுரைகளைத் தொகுத்தும் தனது ‘திராவிட இயக்கம்’ என்கிற நூலை 1962இல் எழுதி முடித்தார். அது மும்பையில் 1965இல் நூலாக வெளிவந்தது. தகவல்களைத் திரட்டுவதற்குப் பெரும்பாடுபட்டுள்ளதையும் பதிவுசெய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT