Published : 23 Aug 2023 06:16 AM
Last Updated : 23 Aug 2023 06:16 AM
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மத்தியில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கான முக்கியக் காரணிகளில் ஒன்று, இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India - CAG) அறிக்கை. இந்நிலையில், கடந்த ஒன்பது ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஏழு திட்டங்கள் குறித்த அறிக்கையை சிஏஜி அலுவலகம் தற்போது வெளியிட்டிருக்கிறது. நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அறிக்கை அது.
சிஏஜி என்பது என்ன? - சிஏஜி என்பது மத்திய-மாநில அரசாங்கங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் வரவு-செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 5இன் கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார அமைப்பு. ஒவ்வோர் ஆண்டும் மத்திய நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்தில் முதலில் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT