Published : 13 Aug 2023 07:24 AM
Last Updated : 13 Aug 2023 07:24 AM
‘ஒளிரும் பல்லவ ஓவியம்’ (இந்து தமிழ் திசை, 6.8.2023) என்கிற தலைப்பிலான சு.தியடோர் பாஸ்கரனின் கட்டுரை படித்தேன். பனைமலைக் கோயில் விமானத்தின் வடக்குச் சாலைத் திருமுன்னிலுள்ள உமை, ஆடவல்லான் ஓவியங்களைப் பற்றிய கட்டுரை இது. அதில் சில கருத்து முரண்பாடுகள் உள்ளன.
1. ‘ஓவியச் செந்நூல்’ பற்றி ‘சிலப்பதிகாரம்’ குறிப்பிடுகிறது என்று கட்டுரையாசிரியர் எழுதியுள்ளார். ஓவியச் செந்நூல் பற்றிக் குறிப்பிடும் இலக்கியம் மணிமேகலை. ஊர் அலர் உரைத்த காதையின் 30-31ஆம் அடிகளே ஓவியச் செந்நூலைக் குறிக்கின்றன. ‘நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த/ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT