Last Updated : 16 Jul, 2023 08:44 AM

 

Published : 16 Jul 2023 08:44 AM
Last Updated : 16 Jul 2023 08:44 AM

ப்ரீமியம்
அஞ்சலி: மிலன் குந்தேரா (1929-2023) | கருத்துகளை விசாரித்த கதைசொல்லி

சமீபத்தில் பிரான்ஸில் காலமான பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மிலன் குந்தேரா (Milan Kundera) பிரான்ஸைப் பூர்விகமாகக் கொண்டவரல்ல. அவர் செக்கோஸ்லோவாகியாவில் (1929) பிறந்தவர். தன்னுடைய 46ஆவது வயதில் அரசியல் காரணங்களுக்காக பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கு வந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை கிடைத்தது.

அவர் தன் தாய் நாட்டைவிட்டு வெளியேறியதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருப்பினும், அவர் பொதுவுடைமைக் கட்சியோடு கொண்டிருந்த தொடர்புகளில் ஏற்பட்ட முரண்பாடுகள்தாம் முக்கியமானவை. அவர் 1947இல் பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்து அயராது உழைத்தவர். இந்நிலையில், அவர் அக்காலகட்டத்தில் எழுதிய கட்டுரை ஒன்றுதான் அவருடைய புலப்பெயர்வுக்குக் காரணமாகிவிட்டது. அவரே அது பற்றி ‘நையாண்டி’ (The Joke, 1967) எனும் நாவலில் குறிப்பிடுகிறார்: ‘1948இல் பொதுவுடைமைக் கட்சி என் நாட்டில் வெற்றி பெற்றது. நானும் மற்ற மாணவர்களும் அதனைக் கைகோத்துக் கொண்டாடினோம். பின்னர் ஒரு நாள் நான் ‘சொல்லக் கூடாத ஒன்றை’ச் சொல்லிவிட்டேன். என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். நானும், அந்த ஆட்டத்திலிருந்து கழன்றுகொண்டேன்’ அவர் ‘சொல்லக் கூடாத ஒன்று’ எனக் குறிப்பிட்டது ‘வாழ்க ட்ராட்ஸ்கி’ என்கிற கோஷம்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x