Published : 14 Jul 2023 06:13 AM
Last Updated : 14 Jul 2023 06:13 AM
ஒருமுறை கல்லூரி மாணவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பிடித்தமான தலைவர் யார் என்பதையும் அதன் காரணத்தையும் கூறுமாறு கேட்டோம். ‘‘காமராஜரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அரசுப் பள்ளிகளை ஊரெங்கும் திறந்ததால்தான் ஏழைகள் படிக்க முடிந்தது. நானும் அப்படிப் படித்தவன்தான்’’ என்று ஒரு மாணவர் கூறினார்.
மறுக்க முடியாத உண்மை இது. இன்றிருப்பதுபோல பெரிய அளவுக்கு அரசுக்கு வரி வருவாய் இல்லாத அன்றைய சூழலில், காமராஜரின் ஆட்சிக் காலத்தில் எழுத்தறிவித்தல் என்பது அரசின் பெரும் கடமையாக இருந்தது. மூன்று கி.மீ.க்கு ஒரு அரசுத் தொடக்கப் பள்ளி திறக்கப்பட்டது. காமராஜர் பிறந்த நாளையொட்டி அந்தச் சாதனைகளை இன்றைக்கு நினைவுகூர்வது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT