Last Updated : 09 Jul, 2023 08:13 AM

 

Published : 09 Jul 2023 08:13 AM
Last Updated : 09 Jul 2023 08:13 AM

ப்ரீமியம்
எழுத்தாளர் ஆனேன் | எம்.கோபாலகிருஷ்ணன்: கதை எழுதிய கதை

‘குதிரை வீரன் பயணம், ஆசிரியர்: யூமா வாசுகி, முகவரி: டிமாண்டி வீதி, திருப்பூர்’ கணையாழியில் வெளியாகியிருந்த சிறு விளம்பரம் கவனத்தை ஈர்த்தது. திருப்பூரிலிருந்து ஒரு சிற்றிதழ் என்பது ஆர்வத்தை உண்டாக்கியது. ஈஸ்வரன் கோயில் அருகில் இருந்த அந்த முகவரியைத் தேடிச் சென்றேன். மூன்று தளங்களைக் கொண்ட கட்டிடம். பெயர்ப் பலகைகள் எதுவும் இல்லாததால், இந்த இடம்தானா என்று சந்தேகத்துடன் நின்றிருந்தபோது, ஒரு பதின்வயதுச் சிறுவன் விறுவிறுவெனக் கீழே இறங்கி வந்தான்.

‘என்ன வேணும்ணே?’ சிரித்த படியே கேட்டான். கையில் சிறிய வயர்கூடை. ‘இங்க யூமா வாசுகின்னு இருக்காங்களா?’ என்று சொல்லி முடிக்கும் முன் கேட்டு கைகாட்டியபடியே நகர்ந்தான் ‘ஒசக்க இருக்காங்க’. அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், கையை மேலே காட்டியதை வைத்துக்
கொண்டு மேலே ஏறினேன். மொட்டை மாடியை அடைந்தேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x