Published : 08 Jun 2023 06:21 AM
Last Updated : 08 Jun 2023 06:21 AM
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவரான கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலைப் பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான பயணத்தில் இந்தத் தீர்ப்பு முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது.
2015ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையத்தில், பட்டியல் சாதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் இறப்பதற்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சுவாதி என்ற சக மாணவியைச் சந்தித்ததும், பிறகு கோகுல்ராஜை ஒரு குழு அங்கிருந்து அழைத்துச் சென்றதும் சிசிடிவி கேமரா காட்சி மூலம் உறுதியாகின. அதுவே இந்த வழக்கில் முக்கியத் தடயமாகவும் ஆனது. இந்த வழக்கில் சுவாதி பிறழ்சாட்சியாக மாறியது பின்னடைவை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT