Published : 07 Jun 2023 06:15 AM
Last Updated : 07 Jun 2023 06:15 AM
மின் கார்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கான மின்கலங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் தனிமம் லித்தியம். முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் லித்தியம் படிவுகள், அண்மையில் ஜம்மு - காஷ்மீரில் கண்டறியப்பட்டிருப்பது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உகந்தது என்று துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளனர். அதே நேரம், இதனால் ஏற்படக்கூடிய சமூக, சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்த கவலைகளையும் அவர்கள் புறந்தள்ளிவிடவில்லை.
இந்தியாவில் லித்தியம் தொழில் துறை: இந்தியாவில் மின் வாகனத் தொழில் துறையின் மதிப்பு 2021இல், 38.35 கோடி அமெரிக்க டாலர்கள் என்றும் 2030இல் இது 15,221 கோடி டாலராக அதிகரிக்கக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. 2019-2020இல் 92.66 கோடி டாலர்கள் (ரூ.6,600 கோடி) மதிப்பிலான 45 கோடி லித்தியம் மின்கலங்களை இந்தியா இறக்குமதி செய்தது. இப்படியான சூழலில், இந்தியாவிலேயே லித்தியம் படிவுகளைக் கண்டறிந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT