Published : 07 Jan 2014 01:41 PM
Last Updated : 07 Jan 2014 01:41 PM
சித்த மருத்துவரும், ஆன்மீக எழுத்தாளருமான ப.சு மணியன் எழுதிய 21 நூல்கள் சென்னையில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. வெளியீட்டு விழா ராணி சீதை மன்றத்தில் நடந்தது. நூல்களை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் வெளியிட்டார். சந்திரசேகர குருஜி பெற்றுக்கொண்டார்.
நீதிபதி பாஸ்கரன் நூல்களை வெளியிட்டு பேசுகையில், “ப.சு.மணியன் ஒரு சிறந்த எழுத்தாளர். சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளிலும் இவரது புகழ் பரவியுள்ளது. இங்கு நான் வெளியிட்ட மணியனின் 21 நூல்களுமே முத்தானவை.” என்றார்.
ஏற்புரையில் மணியன் பேசிய போது, “இன்றைக்கு மருத்துவம் என்பது முழுக்க முழுக்க பணம் என்று மாறிவிட்டது. ஒரு நடுத்தர வர்க்கத்தினர் ஒரு மருத்துவமனைக்குள் சென்று வெளியே வந்தால் அவரின் பாதி சொத்து காணாமல் போய்விடுகிறது. நமது முன்னோர்கள் நமக்காக சித்த மருத்துவத்தை அருளினார்கள். ஆனால் யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சித்தர்கள் வலியுறுத்தி கூறிய சித்த மருத்துவத்தை நாம் பின்பற்ற வேண்டும்.” என்றார்.
இந்நூல் வெளியிட்டு விழாவில் நடிகர்கள் ‘கும்கி’மல்லூரி, சூர்யகாந்த், மற்றும் தொழிலதிபர் பொன்னுசாமி, ரெத்தினசபாபதி, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT