Published : 12 Mar 2023 08:03 AM
Last Updated : 12 Mar 2023 08:03 AM
ஓவியர் ஜேகே என அழைக்கப்படும் ஜெயகுமாரின் ஓவியக் கண்காட்சி மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள சோல் ஸ்பைஸ் காட்சியகத்தில் நடைபெற்றுவருகிறது. மார்ச் 20 வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. மதியம் 12இலிருந்து இரவு 7 மணி வரை காட்சி நடைபெறும். மேலதிக தகவல்களுக்கு: 9994085655
வ.உ.சி. கூட்டம்
வ.உ.சி. ஆய்வு வட்டம் ஒருங்கிணைக்கும் திருநெல்வேலி எழுச்சி 115ஆம் ஆண்டு விழாவில் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி தலைமை உரை நிகழ்த்தவுள்ளார். ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியும், ‘கோரல் போராட்டம் முதல் எழுச்சி வரை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனும் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர். இவ்விழா நாளை (13.03.2023) ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலையிலுள்ள ம.பொ.சி.இல்லத்தில் மாலை 5:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
ராஜேஷ்குமாரின் புதிய நூல்
க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் புதிய நாவல் ‘நிலவுக்கும் நெருப்பென்று பேர்’ பிரதிலிபி பதிப்பக வெளியீடாக இம்மாதம் வெளியாக வுள்ளது. புவனேஷ் என்கிற இளைஞன், வீட்டுக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்யச் செல்கிறான். ஆனால், காதலி வரவில்லை. தான் ஒரு டாக்சியில் ஏறியதாகச் சொல்லியிருப்பாள். புவனேஷ் போலீஸ் உதவியுடன் டாக்ஸியைக் கண்டுபிடித்துவிடுகிறான். டாக்சி ஓட்டுநர் நாயகி வேறு ஓர் இடத்தில் இறங்கிக்கொண்டதாகச் சொல்கிறார். ஆனால், பின் சீட்டில் உடைந்த வளையல் துண்டுகள் உள்ளன. நாயகி என்ன ஆனாள் என்பதை விறுவிறுப்புடன் இந்த நாவல் சொல்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT