Published : 26 Nov 2016 09:12 AM
Last Updated : 26 Nov 2016 09:12 AM
காட்டையே தன் மனைவியாக வரித்துக்கொண்டு வாழும் நடுத்தர வயது பழங்குடி இனத்தவனின் கனவில் சலனமற்றதோர் ஆறு அடிக்கடி வருகிறது.
அதனடியில் புதைந்திருக்கும் ‘இதயக் கல்’ எனும் ஞானக் கல்லை அவன் எடுக்க முனையும்போது ஆறு விழித்தெழுந்து அவனை மூச்சுத் திணறச் செய்வதுடன் கனவு கலைந்துபோகிறது.
தூங்கும் ஆற்றை நோக்கிய அவனது பயண விவரிப்பான இந்நூல் நாகா இன மக்களின் வாழ்க்கையை, நம்பிக்கைகளை விரிவாகச் சொல்கிறது.
இயற்கை விவரிப்புகள் நம்மை வியப்புக்குள் ஆழ்த்துபவை. 2016-ம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான ‘தி இந்து’ (ஆங்கிலம்) பரிசை வென்ற நூல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT