Last Updated : 15 Oct, 2016 10:38 AM

 

Published : 15 Oct 2016 10:38 AM
Last Updated : 15 Oct 2016 10:38 AM

உள்ளாட்சிக்கு ஒரு கையேடு!

உள்ளாட்சி அமைப்புகளே மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றக் கூடிய திறன் பெற்றவை.

இதற்கென தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் அதிகார வரம்பை உணரவும், சிறப்பாகச் செயல்படவும் இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்துகொள்வது அவசியம். மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதியோ தெருவிளக்கோ எதுவானாலும், அவற்றை இந்த அமைப்புகள் மேற்கொள்ள எண்ணற்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. இவ்வகையில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் செயல்பாட்டுக்கான வழிமுறைகளை கற்றுக்கொள்ள உதவும் நூலாக காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் க.பழனித்துரையின் இக்கையேடு அமைகிறது.

உள்ளாட்சி அமைப்புகளும் அவற்றின் உறுப்பினர்களும் விழிப்புணர்வு பெற இன்றளவும் செயல்பட்டுவரும் அவர், இந்நூலில் அவற்றின் அதிகாரங்கள், பொறுப்புகள், கடமைகள், திட்டங்கள், விதிமுறைகள் ஆகியவை பற்றி அண்மைக்காலப் புள்ளிவிவரங்களுடன் மிக எளிமையான முறையில் விளக்கிக் கூறியிருக்கிறார்.

உலகம் முழுவதும் அதிகாரப் பரவல் நடைபெற்றுவருவதன் காரணத்தை விளக்கி, சிற்றூராட்சியிலிருந்து தொடங்கி மாவட்ட அளவிலான ஊராட்சி நிர்வாகம் வரையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் திறமையோடு செயல்படுவதற்கு விரிவாக வழிகாட்டுகிறது இக்கையேடு.

ஊராட்சியிலிருந்து மாநகராட்சி வரையிலான உறுப்பினர் பொறுப்புகளுக்கு இன்று மனுசெய்துள்ள ஒவ்வொரு வேட்பாளரும் படித்து, உணர்ந்து, உள்வாங்கிக்கொள்ள வேண்டிய இன்றியமையாத ஆவணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x