Published : 17 May 2016 12:48 PM
Last Updated : 17 May 2016 12:48 PM
சமகால அரசியல் நிகழ்வுகள் பற்றிய தன் பார்வைகளை இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார் விமர்சகர் செ. சண்முகசுந்தரம்.
இந்துத்துவம், இஸ்லாமிய அடிப்படைவாதங்கள் என இந்தியாவின் மதவாத சக்திகளின் தற்காலப் போக்கைப் பற்றிய விமர்சனங்களை இவர் கட்டுரைகள் முன்வைக்கின்றன. கூடங்குளம் தொடங்கி ரோஹித் வெமுலாவின் மரணம் வரை நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் பற்றிப் பேசியிருக்கிறார் ஆசிரியர். சாதியமும் மதவாதமும் சமகால இந்தியாவில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை இந்தக் கட்டுரைகள் உணர்த்துகின்றன. அத்துடன், சர்வதேச அளவில் நடைபெற்ற முக்கியமான அரசியல் மாற்றங்களையும் இந்நூல் அலசுகிறது.
- கனி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT