Published : 09 Apr 2022 07:10 AM
Last Updated : 09 Apr 2022 07:10 AM

இப்போது படிப்பதும்... இப்போது எழுதுவதும்

சி.எம்.முத்து

அகன். ஜெ என்ற 23 வயது இளைஞனின் ‘பாறை இடுக்கில் மறைந்த முட்டாள் மின்மினிப் பூச்சி’ என்ற கவிதைத் தொகுப்பைச் சமீபத்தில் படித்தேன். இந்த வயசில் இப்படி ஒரு மொழியும் கற்பனையும் இவருக்கு வாய்த்திருப்பது அதிசயம்தான். என்னைப் போன்ற புனைகதை எழுத்தாளர்கள் நவீனக் கவிஞர்களை வாசிக்க வேண்டும். நாங்கள் மனசுக்குள் பக்கம் பக்கமாய் படும் பாடுகளை இந்தக் கவிஞன் பத்து வரிகளில் சொல்லிவிட்டான்.

எனது ‘சோழகர்’ நாவல் முடித்து, அனன்யா வெளியீடாக வரவுள்ளது. தஞ்சாவூர் விமானப்படைத் தளத்துக்கு 786 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்திய பின், அங்கு வாழ்ந்த மனிதர்கள் தங்களுடைய கிராமங்கள், மாடு, மனைகளை இழந்து சிரமமான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்ட நிலையை இந்த நாவலில் 1,500 பக்கங்களில் எழுதியுள்ளேன். 7 தலைமுறை மனிதர்களோடு இந்த நாவலில் உறவாடியிருக்கிறேன். ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கும் பிற்பாடு ஒருங்கிணைந்த தஞ்சையின் பழக்கவழக்கம், பண்பாடு, வட்டார வழக்கு போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இந்த நாவலில் பதிவுசெய்துள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x